ஈரான் அமைச்சருடனும்கலந்துரையாடல்!

Wednesday, May 6th, 2026

ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி சீனாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ அவருடன் அவசரப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதன் போது, போர் காரணமாக முடக்கப்பட்டுள்ள ‘ஹோர்முஸ் நீரிணையை’ சர்வதேச எண்ணெய் போக்குவரத்திற்காக உடனடியாகத் திறக்குமாறு சீனா வலியுறுத்தியது.

மத்திய கிழக்கில் நிலையான போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதே தற்போதைய முன்னுரிமை எனத் தெரிவித்த சீனா, பதற்றத்தைத் தணிக்கத் தான் உதவத் தயாராக இருப்பதாகவும் கூறியது.

சீனா தனது எண்ணெய் தேவையில் 12 சதவீதத்தை ஈரானிடமிருந்து இறக்குமதி செய்வதால், இந்த நீரிணை மூடப்பட்டிருப்பது சீனப் பொருளாதாரத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த வாரம் அமெரிக்க மற்றும் சீன அதிபர்களுக்கு இடையே நடைபெறவுள்ள உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, ஈரானுடன் சீனா நடத்தியுள்ள இந்தப் பேச்சுவார்த்தை சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அணு ஆயுதக் கொள்கையில் ஈரான் உறுதியாக இருப்பதற்குச் சீனா இதன்போது பாராட்டுத் தெரிவித்தது.
000

Related posts: