இஸ்ரேலுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் எதுவும் இல்லை – ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி !
Tuesday, June 24th, 2025
இஸ்ரேலுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் எதுவும் இல்லை என்றும், இஸ்ரேல் தாக்குதல்களை நிறுத்தினால், தாமும், தாக்குதல்களை நிறுத்த முடியும் என்று ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே முழுமையான போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டதாக, டொனால்ட் ட்ரம்ப் கூறிய கூற்றை அரக்சி மறுத்துள்ளார்.
உள்ளூர் நேரப்படி அதிகாலை 4 மணிக்குள் இஸ்ரேல் தனது வான்வழித் தாக்குதல்களை நிறுத்தினால், தெஹ்ரான் தனது தாக்குதல்களை நிறுத்தும் என்று ஈரானின் வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்
ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சியின் கருத்து, ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் நிறுத்தம் குறித்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அறிவித்தலுக்கு பின், ஈரானிடமிருந்து வரும் முதல் அதிகாரப்பூர்வ கருத்தாக அமைந்துள்ளது.
அரக்சி, தெஹ்ரான் நேரப்படி அதிகாலை 4:16 மணிக்கு சமூக தளமான X இல் இந்த செய்தியை பதிவிட்டுள்ளார்
தற்போது வரை, எந்தவொரு போர் நிறுத்தம் அல்லது இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்தும் எந்த ‘ஒப்பந்தமும்’ இல்லை.
இருப்பினும், இஸ்ரேல், ஈரானிய மக்களுக்கு எதிரான அதன் சட்டவிரோத ஆக்கிரமிப்பை தெஹ்ரான் நேரப்படி அதிகாலை 4 மணிக்குள் நிறுத்தினால், அதன் பிறகு தமக்கும் பதிலடியைத் தொடர நோக்கம் இல்லை என்று அவர் அந்த X பதிவில் கூறியுள்ளார்.
“தங்கள் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்த இறுதி முடிவு பின்னர் எடுக்கப்படும்” என்று அரக்ச்சி மேலும் கூறியுள்ளார்
இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்காக அதைத் தண்டிக்க, தங்கள் சக்திவாய்ந்த ஆயுதப் படைகளின் இராணுவ நடவடிக்கைகள் கடைசி நிமிடம் வரை, அதிகாலை 4 மணி வரை தொடர்ந்தன.
“அனைத்து ஈரானியர்களுடனும் சேர்ந்து, எங்கள் அன்பான நாட்டை தங்கள் கடைசி சொட்டு இரத்தம் வரை பாதுகாக்கத் தயாராக இருக்கும், எதிரியின் எந்தவொரு தாக்குதலுக்கும் கடைசி நிமிடம் வரை பதிலளித்த எங்கள் துணிச்சலான ஆயுதப் படைகளுக்கு நான் நன்றி கூறுகிறேன்” என்றும் அவர் கூறியுள்ளார்
000
Related posts:
|
|
|


