இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் அவுஸ்திரேலிய அணி அபார வெற்றி!

Sunday, February 9th, 2025

சுற்றிலா அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

காலியில் இடம்பெற்ற குறித்த போட்டியில் தமது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 231 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.  

துடுப்பாட்டத்தில் இலங்கை அணியின் சார்பில் அஞ்செலோ மெத்யூஸ் 76 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

இந்நிலையில் 75 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கித் தமது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 1 விக்கெட்டினை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை கடந்ததது.

முன்னதாக தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 414 ஓட்டங்களையும், இலங்கை அணி 257 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டது.

இதன்படி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 எனும் அடிப்படையில் அவுஸ்திரேலிய அணி கைப்பற்றியுள்ளது

000

Related posts: