இரணைதீவு கடற்பகுதியில் கைது செய்யப்பட்ட 34 இந்திய மீனவர்களும் விளக்கமறியல்!
Monday, January 27th, 2025
கிளிநொச்சி – இரணைதீவு கடற்பகுதியில் கைது செய்யப்பட்ட 34 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த 34 பேரும் நேற்றையதினம் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் பிரசன்னப்படுத்தியதையடுத்து அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் எஸ். சிவபாலசுப்ரமணியம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதன்படி, அவர்கள் எதிர்வரும் 05 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று அதிகாலை இரணைத்தீவை அண்மித்த கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த குற்றச்சாட்டில் குறித்த 34 இந்திய மீனவர்களும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
அவர்களுடன், சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்காக பயன்படுத்தப்பட்ட மூன்று படகுகளும், கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு எடுக்க உச்ச நீதிமன்றம் முடிவு!
வறிய குடும்பத்திற்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியினரால் கூரைத்தகடுகள் வழங்கிவைப்பு!
மயிலிட்டி,கட்டுவன் பிரதானவீதியைமுழுமையாகவிடுவித்து மக்கள் பாவனைக்கு ஏற்றவாறு புனரமைப்பு செய்யப்படவேண...
|
|
|
முப்படைகள் மற்றும் போலிஸ் துறைகளில் தமிழர்கள் கூடுதலாக இணைத்துக் கொள்ளப்படுவர் - டக்ளஸ் தேவானந்தாவின...
யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களில் விரைவில் 20 புதிய சதொச விற்பனை நிலையங்கள் – அமைச்சர் பந்துல குண...
சிறைச்சாலையில் 65 வீதமானவர்கள் போதைப்பொருள் பாவனை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் - சிறைச்சாலை...


