இந்தியா – அமெரிக்கா இடையே – முன்னெடுக்கப்பட இருந்த வர்த்தகப் பேச்சுவார்த்தை இரத்து!
Monday, August 18th, 2025
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே இந்த மாதம் முன்னெடுக்கப்பட இருந்த வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி, எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரையான காலப்பகுதியில், இந்தியாவின் புதுடில்லிக்கு அமெரிக்கப் பிரதிநிதிகள் மேற்கொள்வதற்குத் திட்டமிடப்பட்டிருந்த பயணம் இரத்து செய்யப்பட்டுள்ளது.
முன்மொழியப்பட்ட வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளைத் தாமதப்படுத்தல் மற்றும் இந்திய பொருட்களுக்கான மேலதிக வரிக்கு எதிர்வரும் 27ஆம் திகதிக்கு முன்னதாக, அமெரிக்காவினால் நிவாரணம் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு தகர்க்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தப் பயணம் இரத்து செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
000
Related posts:
கொரோனா வைரஸ் : சகல ஒத்துழைப்பையும் வழங்க தயார்!
இலங்கை கடற்படைவீரரின் உயிரிழப்பு விவகாரம் - இந்திய இராஜதந்திரி இலங்கை வெளிவிவகார அமைச்சிற்கு அழைக்க...
MP இளங்குமரனின் செயற்பாடு தென்னிலங்கையைச் சேர்ந்தவர்களை அழைத்துவரும் சதி நடவடிக்கைகள் இடம்பெறுகிறதா ...
|
|
|


