இந்தியன் ப்ரீமியர் லீக் – மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி!
Tuesday, April 8th, 2025
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 12 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 221 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சார்பில் விராட் கோலி 67 ஓட்டங்களையும் ரஜத் படிதார் 64 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றுக்கொடுத்தனர்.
தொடர்ந்து 222 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலளித்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 209 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுத் தோல்வியடைந்தது.
000
Related posts:
அசாதாரண சூழ்நிலை விரைவில் தணிக்கப்படும் - பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் !
நாளைமுதல் ரயில் சேவைகள் இடம்பெறும் - ரயில்வே திணைக்களம் தெரிவிப்பு!
“நாம் தோற்கவில்லை - பெரிய பாடத்தைக் கற்றுக் கொண்டோம்” - ரொனால்டோவின் மனைவி ஆதங்கம்!
|
|
|


