இணக்க அரசியல் என்பது எமது அரசியல் அணுகுமுறையே தவிர காலத்தின் நிர்ப்பந்தம் காரணமாக சுவீகரித்துக் கொண்ட ஒன்றல்ல – ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தெரிவிப்பு!

Monday, November 11th, 2024


இணக்க அரசியல் என்பது எமது அரசியல் அணுகுமுறையே தவிர காலத்தின் நிர்ப்பந்தம் காரணமாக சுவீகரித்துக் கொண்ட ஒன்றல்ல.

இணக்க அரசியல் ஊடாகவே தேசிய நல்லிணக்கத்தை வலுப்படுத்தி  பல  அரசியல் இலக்குகளை அடைந்துள்ளோம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

வட்டுக்கோட்டை தொகுதியில் கட்சியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு இவ்வாறு தெரிவித்திருந்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மேலும் கூறுகையில் –

தமிழர் தேசத்தில் சரியான அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதை நீண்ட காலமாக ஈ.பி.டி.பி வலியுறுத்தி வருகின்றது.

கடந்த காலங்களில் போலித் தேசியம் பேசியவர்களின் சுயரூபம் மக்கள் மத்தியில் அம்பலமாகி வருகின்றது. இவை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு சாதகமான சமிக்கையாகவே இருக்கின்றது.
இதேநேரம் எனது கடந்த கால வெற்றி என்பது மக்களுக்கான வெற்றியாக அமைந்திருந்தது. 

எமது வாக்கு வங்கி என்பது கட்சியின் வேலைத் திட்டங்களினாலும், கொள்கை சார்ந்த ஈர்ப்பினாலும் கட்டியெழுப்பப்பட்டது.  தனிநபர் சார்ந்தது இல்லை என்பதை வரலாறு பலமுறை நிரூபித்திருக்கின்றது. இதை இம்முறையும் மக்கள் நிரூபாணமாகுவர் என்பதுடன் எதிர்காலத்தினையும் மக்கள் தீர்மானிப்பார்கள்.

மேலும் எமது தொடர்ச்சியான உழைப்பு மக்கள் மத்தியில் அங்கீகாரத்தினை பெற்று வருகின்றது. இது இம்முறை நிரதர்சனமாகும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது.

தற்போது மக்களது எமது திசை நோக்கியதான அணிதிரள்வும் அதையே காட்டி நிற்கின்றது அத்துடன்  இனிவருங்காலத்தில் படிப்படியாக ஏனைய தமிழ் அரசியல் தரப்பினரும் எமது அரசியல் வழிமுறையை பின்பற்ற வேண்டிய கட்டாயத்திற்கு மக்களாலே அல்லது சுயமாகவோ தள்ளப்பட்டுள்ளனர்.

எமது வழிமுறையே நடைமுறைச் சாத்தியமானது என்பதை கடந்த 35 வருடங்களுக்கு மேலாக நாம் வலியுறுத்தி வருகின்றோம். அதுவே இன்று யதார்த்தமாகியும் உள்ளது என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
000

Related posts: