அறிவிப்புகள் செய்திகள் குறித்து அதிக அவதானம் செலுத்துங்கள் – நீரியல் வளங்கள் திணைக்களம்வலியுறுத்து!
Wednesday, November 26th, 2025
…..
வங்காள விரிகுடா பிராந்தியத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, நாட்டைச் சூழவுள்ள அனைத்து மீன்பிடிப் படகுகளும் கடற்றொழிலுக்குச் செல்வது மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த ஆபத்தான கடல் பிராந்தியங்களில் தற்போது தொழிலில் ஈடுபட்டுள்ள அனைத்து மீன்பிடிப் படகுகளும் கரைக்குத் திரும்புமாறும் அல்லது பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும், அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பின்பற்றுமாறும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இது தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்கால அறிவிப்புகள் மற்றும் வானொலிச் செய்திகள் குறித்து அதிக அவதானம் செலுத்துமாறும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
09
Related posts:
அரிசி விற்பனையில் மோசடி: முறைப்பாடு செய்ய தொடர்பிலக்கம் !
உள்ளூராட்சி பிரதானிகளை எச்சரிக்கும் அமைச்சர் - பொது நிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் !
சீனாவின் எக்ஸிம் வங்கி இலங்கைக்கு கடன் நீடிப்பை வழங்கியுள்ளது - னாவின் வெளிவிவகார அமைச்சு அறிவிப்பு!
|
|
|


