அமரர் நிரோஷாவின்பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி மரியாதை!

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வலி தெற்கு பிரதேச செயற்பாட்டாளர் தோழர் மதஷன் அவர்களது சகோதரி அமரர் துசியந்தன் நிரோஷா அவர்களது பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதையை செலுத்தினார்.
அமரர் நிரோஷா கல்லீரல் நோய் காரணமாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
இன்நிலையில் யாழ்ப்பாணம் மூத்தவிநாயகர் வீதியில் உள்ள அன்னாரது இல்லத்தில் இறுதிக் கிரியைகள் இன்று நடைபெற்ற நிலையில் அமரரது இல்லத்திற்கு சென்றிருந்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பூதவுடலுக்கு தனது இறுதி அஞ்சலியை செலுத்தியதுடன் குடும்பத்தினருக்கு தனது ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்தார்.
இதன்போது கட்சியின் தோழர்களும் கலந்துகொண்டு தமது இறுதி மரியாதையைச் செலுத்தியிருந்தனர்.
Related posts:
அடிப்படைவாத கல்வி முறையை இல்லாதொழிக்க வேண்டும் – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!
முல்லைத்தீவு ஐயன்குளம் மக்களுக்கு அரச வேலை வாய்ப்பு – மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்கவும் அமைச்...
மணியம்தோட்டம் பிரதேசத்திற்கு அமைச்சர் டக்ளஸ் திடீர் விஜயம் - மக்களின் எதிர்பார்ப்புக்கள் குறித்து ஆர...
|
|