அனைத்து விமான நிலையங்களுக்கும் உயர் பாதுகாப்பு எச்சரிக்கை!

Saturday, August 9th, 2025

விமான நிலையங்களில் பாதுகாப்பைப் பலப்படுத்துமாறு அனைத்து பங்குதாரர்களுக்கும் இந்திய சிவில் விமானப் பாதுகாப்புப் பணியகம் அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் பயங்கரவாத அச்சுறுத்தல் குறித்து உளவுத்துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து, இந்தியாவின் அனைத்து விமான நிலையங்களும் அதிகபட்ச எச்சரிக்கை நிலையில் உள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் செப்டம்பர் 22 ஆம் திகதி முதல் அக்டோபர் 2, ஆம் திகதி வரையான காலப்பகுதிகளில் சாத்தியமான அச்சுறுத்தல்களுக்கான இந்திய உளவுத்துறை தகவல்களைக் கருத்தில் கொண்டு, இந்திய சிவில் விமானப் பாதுகாப்பு பணியகம் (BCAS) உயர்தர பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிவித்துள்ளது

000

Related posts: