அதிக பணம் அறவிடப்பட்டால் முறைப்பாடு செய்ய முடியும் – தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மக்களுக்கு அறிவிப்பு!

Wednesday, November 20th, 2024

பஸ் கட்டணத்திற்கு பதிலாக அதிக பணம் அறவிடப்பட்டால் முறைப்பாடு செய்ய முடியும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மக்களுக்கு அறிவித்துள்ளது.

1955 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடு செய்ய முடியும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கொழும்பு – கோட்டையில் இருந்து கெக்கிராவ நோக்கி பயணித்த பயணி ஒருவரிடம் கப்பம் பெற்ற சம்பவம் ஒன்று நேற்று பதிவாகியிருந்தது.

இந்நிலையில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மக்களுக்கு இதனை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: