அடையாளத்தை பாதுகாக்கவேலணையில் நாட்டப்பட்ட ஆயிரக்கணக்கான  விதைகள்!

Friday, October 17th, 2025


……..
தீவகத்தின் அடையாளத்தை பாதுகாத்து, பசுமையை உருவாக்கவும், பனைமரங்களின் பாதுகாப்பை உறுதி செய்து  நன்னீர் வளங்களைப் பாதுகாக்கவும்  வேலணை பிரதேசத்தில் ஆயிரக்கணக்கான பனம் விதைகள் நாட்டப்பட்டன.

குறித்த திட்டம், இன்று காலை வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட அல்லைப்பிட்டி பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.

அல்லையூர் இளைஞர்களின் ஏற்பாடில் வேலணை பிரதேச செயலகம் மற்றும் வேலணை பிரதேச சபை ஆகியவற்றின் அனுசரணையுடன் குறித்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் , பிரதேச சபையின் உறுபினர்கள், கிராம உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர் மற்றும் இளைஞர்கள்  என பலர் கலந்துகொண்டு பனம் விதைகளை நாட்டியிருந்தமை  குறிப்பிடத்தக்கது.

Related posts: