பொருளாதார நெருக்கடி – பட்டினியை எதிர்நோக்கியுள்ள யாசகர்கள்!

Tuesday, April 7th, 2026


…….
சமைத்த உணவுவகைளினதும், சிறு தின்பண்டங்களினதும் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளமையால் யாசகர்கள் உணவுக்கானத் தட்டு;பபாட்டினை எதிர்நோக்கியுள்ளனர் எனத் தெரிய வருகின்றது.

ஏனையவர்களிடம் கையேந்நி கிடைக்கின்ற நாளாந்த வருமானங்களில் தங்கியிருக்கின்ற அவர்களது வாழ்க்கைப் போராட்டங்களுக்கு நகர்ப்புற மக்களும் ஒருவகையில் அழுத்தங்களைக் கொடுத்து வருவதாகவும் தெரியவருகிறது.

நாள் ஒன்றுக்கு இரு வேளைகள் சிறிய தின்பண்டங்களை கொண்டும், ஒரு வேளை சோறு அல்லது பாண் சாப்பிட்டும் வாழ்க்கையை கழித்துவரும் இவர்கள், தற்போது கடும் உணவுத் தட்டுப்பாட்டுக்கு முகங்கொடுத்து வருவதாகத் தெரிவிக்கின்றனர்.

வர்த்தகர்கள், மக்கள் குழுக்கள் மற்றும் தனிப்பட்டவர்கள் புண்ணியம் கருதி வழங்கும் உணவும் தற்போது அதிகளவில் தரப்படுவதில்லை என்றும் யாசகர்கள் தற்போது வணக்க ஸ்தலங்கள், புண்ணிய தானங்கள் வழங்கும் இடங்களை முற்றுகையிட்டு வருவதாகவும் யாசகர்கள் தெரிவிக்கின்றனர்.

நாட்டிலுள்ள யாசகர்களின் எண்ணிக்கை தொடர்பில் சரியான விபரங்கள் இல்லாவிட்டாலும் 40,000க்கும், 60,000க்கும் இடைப்பட்ட தொகையினர் இருப்பதாக தொண்டர் அமைப்புகளின் தரவுகள் தெரிவிக்கினறன.

இவர்களது குடும்பங்கள் பெரும்பாலும் கொழும்பு, கம்பஹா, காலி, குருனாகலை போன்ற நகரங்களை அண்டி வாழ்ந்து வருகின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: