புதிய முறையில் மாகாண சபைத் தேர்தல்!
Friday, March 16th, 2018
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலை புதிய தேர்தல் முறையில் நடத்துவதாயின் அதன் நடைமுறைச் சாத்தியம் சம்பந்தமாக ஆராய வேண்டும் என்று தேர்தல் கண்காணிப்பு அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
தற்போது சப்ரகமுவ, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாண சபைகள் கலைக்கப்பட்டுள்ளதுடன் இந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் வடமேல், மத்திய மற்றும் வடக்கு மாகாண சபைகளின் காலமும் நிறைவடையவுள்ளது.
இதற்கு மேலதிகமாக அடுத்த ஆண்டு மேல் மற்றும் தென் மாகாணங்களின் காலமும் நிறைவடையவுள்ளது.
எவ்வாறாயினும் இந்த மாகாண சபைகளுக்கான தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்று தேர்தல் கண்காணிப்பு அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
Related posts:
இலங்கையர்களுக்கு ஜப்பானில் தொழில் வாய்ப்பு!
இலங்கையில் 1, 683 தொழுநோயாளர்கள் இனங்காணல்!
புலிகள் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிட்டு தாக்குதல் நடத்தவில்லை - அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்!
|
|
|


