செயலாளர் நாயகம்  டக்ளஸ் தேவானந்தாவை கௌரவித்த சாவகச்சேரி மக்கள்!

Friday, February 14th, 2025


……
சாவகச்சேரி, பெரியமாவடி, சித்தி விநாயகர் சனசமூக நிலையத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட , ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம்  டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கான நன்றியறிதலும் கௌரவிப்பு நிகழ்வும்  இன்று இடம்பெற்றது.

முன்னாள் அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா அவர்களின், 2023 மற்றும் 2024 ஆண்டுகளுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து சுமார் 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் குறித்த சனசமூக நிலையத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்தது.

குறித்த நிதியிலிருந்து  தளபாட உபகரணங்கள் கொள்வனவு செய்யப்பட்ட நிலையில்,  சனசமூக நிலையத்தினரால் செயலாளர் நாயகத்திற்கான கௌரவிப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. –

Related posts: