காரைநகரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எல்லைதாண்டிய இந்தியப் படகுகளின் ஏல விற்பனை செய்யப்படும் பணி ஆரம்பம்!

யாழ்ப்பாணம் காரைநகரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எல்லைதாண்டிய சட்டவிரோத இந்திய மீன் பிடியாளர்களின் படகுகள் இன்று ஏலத்தில் விற்பனை செய்யப்படும் பணி கொழும்பில் இருந்து வந்த அதிகாரிகள் குழுவின் முன்னிலையில் காரைநகரில் ஆரம்பமானது.
இலங்கையின் 5 துறைமுகப் பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டவிரோத தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்திய மீனவர்களிற்குச் சொந்தமான ட்ரோலர் விசைப் படகுகள் இன்றுமுதல் 5 தினங்களிற்கு ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளது.
இவ்வாறு விற்பனை செய்யப்படவுள்ள படகுகளை கடந்த ஒருவாரமாக 50 ற்கும் அதிகமனோர் பார்வையிட்டனர்.
இவ்வாறு பார்வையிட்ட படகுகளில் காரைநகரில் உள்ள படகுகளே இன்று ஏலம்விடும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இப் பணி இன்று மாலை 4 மணிவரை இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஒரே போட்டியில் பல சாதனைகளை படைத்த டிவில்லியர்ஸ்!
மீன்பிடித்துறை உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை!
வடக்கின் வளங்களை அந்தப் பிரதேச கடற்றொழிலாளர்களே பூரணமாக பயன்படுத்த நடவடிக்கைமேற்கொள்ளப்படுகிறது – அம...
|
|