பயங்கரவாத பிரச்சினைக்கு தீர்வு காண பாதுகாப்பு செயலாளர் விடுத்துள்ள கோரிக்கை!

Friday, August 30th, 2019


பயங்கரவாத பிரச்சினைக்கு தீர்வு காண அனைத்து நாடுகளும் ஒன்றிணைய வேண்டுமென்று பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொட கோரிக்கை விடுத்துள்ளார்.

இராணுவத்தால் வருடாந்தம் ஒழுங்கு செய்யப்படும் கொழும்பு பாதுகாப்பு மாநாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றிருந்தது.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற இந்த மாநாட்டில் உலகளாவிய ரீதியில் பாதுகாப்பு துறையுடன் தொடர்புடைய தரப்பினர்கள், புத்திஜீவிகள், மற்றும் பாதுகாப்பு துறை விசேட நிபுணர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதில் கலந்துகொண்டு பேசிய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர், “பயங்கரவாதத்திற்கு எதிராக தனித்தனியாக போராடுவதை விட ஒன்றிணைந்து மூலோபாயத்தை பின்பற்றுவதன் மூலம் வினைத்திறனான பெறுபேறுகளை பெற்றுக் கொள்ள முடியும்” என கூறியுள்ளார்.

Related posts: