வாகனம் ஓட்டும்போது  தொலைபேசிப் பாவனைக்குத் தடை!

Wednesday, March 30th, 2016

வாகனங்கள் செலுத்தும் போது கையடக்கத் தொலைபேசியின் பாவனையை முற்றாகத் தடை செய்வதற்கான சட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்தவுள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தெரியவருவதாவது –

கையடக்கத் தொலைபேசிப் பாவனையின் போது ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன் இதில் மோட்டார் சைக்கிள் விபத்துக்களே அதிகளவில் இடம்பெறுவதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை சுட்டிக்காட்டியுள்ளது.

நேற்று சட்டத்தரணிகள் சங்கத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை கலாநிதி சிசிறி கோதாகொட தெரிவித்தார். வாகனங்களின் வேகக் கட்டுப்பாடு தொடர்பான சட்டத்தில் மாற்றங்களை கொண்டு வருவதற்கு உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுக்க எண்ணியுள்ளதாகவும்,வீதி சமிஞ்சை மற்றும் அது தொடர்பான சட்டங்களை வலுப்படுத்துவது தொடர்பில் பல தீர்மானங்களை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த விடயங்கள் தொடர்பில் எதிர்வரும் வாரமளவில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என கலாநிதி சிசிற ஜயகொடி மேலும் தெரிவித்துள்ளார்

Related posts: