நிர்வாக நிறைவேற்று பொறுப்பிலிருப்பவர்களது அசமந்தம் மாநகருக்கு பெரும் அச்சுறுத்தல் – ஈ.பி.டி.பியின் யாழ் மாநகர உறுப்பினர் றெமீடியஸ்!

Tuesday, April 9th, 2019

நிர்வாக நிறைவேற்று பொறுப்பிலிருப்பவர்களது அசமந்ததனமான செயற்பாடுகளால் யாழ் மாநகரின் வளர்ச்சி பாதிக்கப்படுவதுடன் அதற்கு பெரும் அச்சுறுத்தலாகவும் இது அமைந்துள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகரசபை உறுப்பினரும் பிரபல சட்டத்தரணியுமான றெமீடியஸ் தெரிவித்துள்ளார்.

யாழ் மாநகரசபையின் மாதாந்த அமர்வு இன்றையதினம் சபையின் முதல்வர் ஆர்னோல் தலைமையில் கூடியது. இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

அதிகாரிகளின் அசமந்தப்போக்குத்தனங்களால் யாழ் மாநகரின் வளங்கள் சுரண்டப்படுவதுடன் மக்களது அபிவிருத்திகளும் தடுக்கப்படும் நிலை காணப்படுகின்றது. இந்நிலை தொடருமானால் யாழ் மாநகர் எதிர்காலத்தில் மிக மோசமான நிலையை சந்திக்க நேரிடும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts: