நாளைமுதல் வெளிநாட்டு பயணிகள் வருவதற்கு அனைத்து விமான நிலையங்களையும் மீள திறக்க நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் டீ.வி. சானக்க தெரிவிப்பு!

Monday, May 31st, 2021

நாட்டில் அனைத்து விமான நிலையங்களும் நாளை முதலாம் திகதிமுதல் மீள திறக்கப்படவுள்ளதாக சிவில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் டீ.வி. சானக்க தெரிவித்தள்ளார்.

நாட்டில் கொவிட் பரவல் நிலையை கருத்திற்கொண்டு வெளிநாட்டு பயணிகள் இலங்கை வருவதற்கு இன்று நள்ளிரவுவரை தடை விதிக்கப்பட்டது. இதனால் விமான நிலையத்தின் வருகை தரு முனையம் தற்காலிகமாக மூடப்பட்டது.

இந்நிலையில் நாளைமுதல் வெளிநாட்டு பயணிகள் இலங்கை வருவதற்கு அனைத்து விமான நிலையங்களையும் மீள திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனினும், இலங்கை வரும் விமானமொன்றில் வரக்கூடிய ஆகக்கூடிய பயணிகளின் எண்ணிக்கை 75 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: