செய்திகள்

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்த சீனா ஒருபோதும் முற்படவில்லை – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Saturday, February 10th, 2024
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்த சீனா ஒருபோதும் முற்படவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மேலும், பொருளாதார... [ மேலும் படிக்க ]

தங்களுக்கான பாதையை அமைத்துக் கொள்ளும் இயலுமை இந்து சமுத்திர வலய நாடுகளுக்கு உள்ளது – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டு!

Saturday, February 10th, 2024
உலகின் பலமான நாடுகள் தங்களது தலைவிதியைத் தீர்மானிக்கும் வரை காத்திருக்காமல், தங்களுக்கான பாதையை அமைத்துக் கொள்ளும் இயலுமை இந்து சமுத்திர வலய நாடுகளுக்கு உள்ளதென ஜனாதிபதி ரணில்... [ மேலும் படிக்க ]

தென்னிந்திய கலைஞர்களுக்கும் எமது மக்களுக்கும் ஏற்பட்ட ஏமாற்றம் வருத்தமளிக்கிறது. – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Saturday, February 10th, 2024
தென்னிந்தியப் பாடகர் ஹரிகரன் தலைமையில் இசைக் கலைஞர்கள் கலந்து கொண்ட இசை நிகழ்ச்சியில் இடம்பெற்ற விரும்பத்தகாத சம்பவங்கள் வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ள அமைச்சர் டகள்ஸ் தேவானந்தா,... [ மேலும் படிக்க ]

இலங்கை அணியுடனான ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் போராடித் தோற்றது ஆப்கான்!

Saturday, February 10th, 2024
சுற்றுலா ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெற்றது. கண்டி - பல்லேகலை மைதானத்தில் இடம்பெற்ற குறித்த போட்டியின்... [ மேலும் படிக்க ]

சேவையில் இருந்து நீக்கப்பட்ட 200 பேருந்துகள் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் சேவையில் – பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் விசேட நிகழ்வு!

Saturday, February 10th, 2024
சேவையில் இருந்து நீக்கப்பட்ட 200 பேருந்துகளை புதுப்பித்து மீண்டும் சேவையில் ஈடுபடுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது. பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தை... [ மேலும் படிக்க ]

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இடையே விசேட சந்திப்பு!

Saturday, February 10th, 2024
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இடம்பெறும் 7... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானின் 12 ஆவது பொதுத் தேர்தல் – வெற்றியை கொண்டாடுமாறு முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தனது ஆதரவாளர்களுக்கு அறிவிப்பு!

Saturday, February 10th, 2024
பாகிஸ்தானின் 12 ஆவது பொதுத் தேர்தல் வெற்றியை கொண்டாடுமாறு பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தனது ஆதரவாளர்களுக்கு அறிவித்துள்ளார். இன்று (10) காலை நிலவரப்படி அந்நாட்டின் 266... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் – சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சந்திப்பு – முதலீடு, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளை வலுப்படுத்துவது குறித்தும் கவனம்!

Saturday, February 10th, 2024
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்கிற்கும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கும் இடையில் சந்திபொன்று இடம்பெற்றுள்ளது. நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் வைத்து இந்த... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 14ஆம் திகதி ஒரு இலட்சத்து 35 ஆயிரம் மில்லியன் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், ஏல விற்பனை – இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு!.

Saturday, February 10th, 2024
ஒரு இலட்சத்து 35 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 14ஆம் திகதி ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, 91... [ மேலும் படிக்க ]

ஹரிஹரன் இசை நிகழ்ச்சியில் குழப்பம் – யாழ்ப்பாணத்தில் ஆறு பேர் பொலிசாரால் கைது யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு பெரும் குழப்பத்துடன் நடைபெற்ற ஹரிஹரனின் இசை நிகழ்ச்சியின் போது ஆறு பேர் கைது செய்யப்பட்டதுடன் மூன்று பேர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இசை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் ஒழுங்கீனம், பொலிஸாரின் பற்றாக்குறை காரணமாகவும் கட்டுக்கடங்காத பார்வையாளர்கள் மேடைக்கு அருகில் கூடியதாலும் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் குழப்பம் ஏற்பட்டது. மேலதிக பொலிஸார், விசேட அதிரடிப் படையினர் களமிறக்கப்பட்ட போதும் நிலைமை கட்டுங்கடங்காது சென்றது. கதிரை, தண்ணீர் தாங்கி உள்ளிட்ட பல பொருட்கள் சேதமாகின. நேற்றிரவு நிகழ்ச்சியின்போது பலரும் கைது செய்யப்பட்டு கடும் எச்சரிக்கையின் விடுவிக்கப்பட்டனர் என பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது ஒருவர் மயக்கமுற்றதுடன் பலரும் காயமடைந்தனர். தற்போதைய நிலையில் மூன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, 25000 ரூபா அனுமதிச் சீட்டு, 7000 ரூபா அனுமதிச் சீட்டு, 3000 ரூபாய் அனுமதிச் சீட்டு என கட்டணத்திற்கு ஒதுக்கப்பட்ட ஆசனங்களில் அமர்நதும் அதன்பின்னே இலவசமாக நின்றவாறும் இசைநிகழ்ச்சியை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனாலும் கட்டணத்திற்கு ஒதுக்கப்பட்ட ஆசனங்களில் பெரும்பாலான கூட்டம் அனுமதிச் சீட்டுகளே இல்லாமல் நுழைந்ததால் குழப்பம் ஏற்பட்டது. முதியவர்கள், கைக்குழந்தைகளோடு வந்த பலர் பணத்தை செலுத்தியும் ஆசனங்களின்றி நின்றபடி இசை நிகழ்ச்சியை பார்க்க வேண்டிய அவலம் காணப்பட்டதாக பலரும் விசனம் தெரிவித்தனர். பெருமளவு தென்னிந்திய நட்சத்திர கலைஞர்கள் இந் நிகழ்ச்சிக்கு வந்தபோதும் போதிய அளவு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை. இதனால் தடுப்புகள் உடைக்கப்பட்டு பலர் குறுகிய இடத்திற்குள் நுழைந்ததுடன்,தடுப்புகளை உடைத்துக்கொண்டு வரும்போது பணம் செலுத்தியும் கதிரைகள் இல்லாமல் நின்றவர்களோடு மோதுப்பட்டு பலர் நிலைதடுமாறி கீழே விழுந்து நெருக்கடி ஏற்பட்டது. பெருமெடுப்பில் ஒழுங்குபடுத்தப்பட்ட பாடகர் ஹரிஹரனின் இசைநிகழ்ச்சி சீரான ஒழுங்குபடுத்தல் இன்மை காரணமாக குழப்பத்தில் முடிந்தமை குறிப்பிடத்தக்கது. 000

Saturday, February 10th, 2024
ஹரிஹரன் இசை நிகழ்ச்சியில் குழப்பம் - யாழ்ப்பாணத்தில் ஆறு பேர் பொலிசாரால் கைது! யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு பெரும் குழப்பத்துடன் நடைபெற்ற ஹரிஹரனின் இசை நிகழ்ச்சியின் போது ஆறு பேர்... [ மேலும் படிக்க ]