8 ஆயிரம் கோடி அமெரிக்கா இலங்கைக்கு நன்கொடை – இராஜாங்க அமைச்சர் !
Saturday, July 21st, 2018
இலங்கையின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்காக 80 பில்லியன் ரூபாவை (8000 கோடி ரூபா) கொடையாக வழங்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையின் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் நிரோ~ன் பெரேரா இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
காணி, போக்குவரத்து, விவசாயம், உயர்கல்வி, மின்சக்தித் துறைகளில் அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கு இந்தக் கொடையைப் பயன்படுத்த முன்மொழியப்பட்டுள்ளது.
அமைச்சரவையின் அனுமதி பெறப்பட்ட பின்னர் முன்மொழியப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான அமெரிக்காவின் கூட்டுத் திட்டப் பணியகத்துடன் இலங்கையின் தலைமை அமைச்சர் செயலகம், இறுதிக் கட்டப் பேச்சு நடத்தும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
பாதுகாப்பான புதிய வகை சிலிண்டர்கள் இன்றுமுதல் சந்தையில் - துறைசார் நிறுவனங்கள் நடவடிக்கை!
கடந்த இரு மாதங்களில் உண்டியல் முறை மூலம் கோடிக்கணக்கான பணம் பறிமாற்றம் - வங்கி கணக்குகள் பரிசோதனை!
பீச் கிராப்ட் விமானம் ஒன்றை இலங்கைக்கு வழங்கியது அவுஸ்ரேலியா!
|
|
|
சுற்றுலாத்துறையில் உள்ளவர்களுக்கு பல்வேறு சலுகைகள் - சுற்றுலா பயணிகளுக்கு தனிமைப்படுத்தல் செயற்பாடு...
மாதத்தின் முதல் 15 நாட்களில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை - சுற்றுல...
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் பதவிக்கு நேர்முகத்தேர்வு - இரண்டாக பிரிக்கப்படுமா ...


