ரணில் விக்கிரமசிங்க இருந்தது போதும் – சட்டத்தரணி உபுல் ஜயசூரிய !
Sunday, September 1st, 2019
தற்போது நாட்டு மக்களில் 10 பேர் இல்லை 100 பேரிடம் கேட்டாலும், நான் நினைக்கின்றேன் 99 பேர் ரணில் விக்கிரமசிங்க இருந்தது போதும் என கூறுவார்கள் என சட்டத்தரணி உபுல் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.
தேர்தல் ஆணைக்குழு ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுவைக் கோரிய பின்னரே ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்க முடியும் என ஐக்கிய தேசிய கட்சியின் சட்ட செயலாளரினால் வௌியிடப்பட்டிருக்கும் அறிக்கையானது ஒரு மோசடியான அறிக்கை என சட்டத்தரணி தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற வேண்டுமாயின் கட்டாயமாக வெற்றி பெறக்கூடிய நபருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என ஐக்கிய சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி உபுல் ஜயசூரிய மேலும் தெரிவித்தார்.
Related posts:
575 வாகனங்களை காணவில்லை - பொலிஸ்மா அதிபருக்கு கடிதம்!
10 ஆவது உலக நீர் உச்சி மாநாட்டின் உயர்மட்டக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இ...
வடக்கின் அரச சாரதிகள் தமக்கான இடமாற்றம் வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம்!
|
|
|


