வாகனங்கள் தொடர்பில் அரசாங்கம் அதிரடி !

Thursday, August 2nd, 2018

1000C திறன் குறைவான அனைத்து மோட்டார் வாகனங்கள் மற்றும் ஹைட்பிரிட் வாகனங்களுக்கு அறவிடப்படுகின்ற தயாரிப்பு வரியை இன்று முதல் அதிகரிக்க நிதி அமைச்சு தீர்மானித்தது.

அதற்கமைய என்ஜின் திறன் 1000க்கு குறைவான வாகனங்களின் இறக்குமதி வரி 1.5 மில்லியன் ரூபாவாகவும், ஹைட்பிரிட் மற்றும் மின்சார வாகனங்களின் வரி 1.2 மில்லியன் ரூபாவாகவும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த காலப்பகுதியில் இந்த மோட்டார் வாகனம் இலங்கைக்கு இறக்குமதி செய்வது அதிகாரித்துள்ளமையினால் நிதி அமைச்சு இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

அதற்கமைய Wagon R Fx Safety , Wagon R Fz Safety, Wagon R Stingray ஆகிய மோட்டார் வாகனங்களின் வரிப்பணம் 425000 அதிகரிக்கின்ற நிலையில் அந்த மோட்டார் வாகனங்கள் 27 – 28 லட்சம் ரூபாய், 29 – 30 லட்சம் ரூபாய், 29 – 30 லட்சம் ரூபாய், 31 – 32 லட்சம் ரூபாய் விலைகளில் சந்தையில் விற்பனைக்கு வரவுள்ளது. Japan Alto வாகனத்தின் புதிய வரி 345 000 ரூபாவாக அதிகரித்துள்ள நிலையில் அது 26 – 28 லம்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

எப்படியிருப்பினும் புதிய திருத்தத்தின் கீழ் Toyota vitz, Toyota tank, suzuki baleno, மற்றும் Honda civic மோட்டார் வாகனங்களின் விலை குறைவடைந்துள்ளது. புதிய வாகன விலை 250000 ரூபாவினால் குறைவடைந்துள்ளது.

உயர் ரக வாகனங்களின் விலை அதிகரித்த போதிலும், ஏனைய வாகனத்தின் விலை குறைப்பானது பெரும்பாலான இலங்கை மக்களுக்கு நன்மையாக அமையவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts:


சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதிக்குமேலும் இரண்டு அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்கள் - கடும் சீற்...
வேறு எந்த மிருகங்களுக்கும் கொவிட் தொற்று உறுதியாகவில்லை - வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு!
சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தில் அனைத்து அரசியல் தலைவர்களும் பொறுப்புடன் செயற்பட வேண்டும...