வறட்சியின் தாக்கம்:  வடக்கில் இலட்சக்கணக்கானோர் பாதிப்பு!

Saturday, July 29th, 2017

தொடரும் வறட்சி காரணமாக வடக்கில் ஒரு இலட்சத்து 33 ஆயிரத்து 678 குடும்பங்களை சேர்ந்த 4 இலட்சத்து 62 ஆயிரத்து 815 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்ட வறட்சி பாதிப்பு தொடர்பான அறிக்கையில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

நிலவுகின்ற வறட்சியான காலநிலையால் 3 இலட்சத்து 15 ஆயிரத்து 775 குடும்பங்களைச் சேர்ந்த 10 இலட்சத்து 93 ஆயிரத்து 717 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல், தெற்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களைச் சேர்ந்தவர்கள் வறட்சி பாதிப்பை எதிர்நோக்கியுள்ள நிலையில், வட மாகாணமே அதிகமாக பாதிக்கபபட்டுள்ளது

யாழ்ப்பாணத்தில் 34 ஆயிரத்து 49 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 206 பேரும், முல்லைத்தீவில் 35 ஆயிரத்து 730 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 308 பேரும், கிளிநொச்சியில் 24 ஆயிரத்து 6 குடும்பங்களைச் சேர்ந்த 83 ஆயிரத்து 378 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் 24 ஆயிரத்து 507 குடும்பங்களைச் சேர்ந்த 85 ஆயிரத்து 771 பேரும், மன்னாரில் 15 ஆயிரத்து 386 குடும்பங்களைச் சேர்ந்த 54 ஆயிரத்து 152 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது

இதேவேளை, இலங்கையின் வறட்சி நிவாரணப் பணிகளுக்கு தென் கொரியா, மனிதாபிமான உதவிகளை வழங்கியுள்ளது.ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடன் இடம்பெற்ற சந்திப்பில் தென் கொரிய நாடாளுமன்ற தூதுக்குழு, எட்டு தண்ணீர் பவுசர்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களைக் கையளித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.வறட்சியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன் வந்தமைக்காக தென்கொரிய அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் ஜனாதிபதி இதன்போது நன்றி தெரிவித்துள்ளார்.

Related posts: