வடமராட்சி கிழக்கில் சட்டமுரணாகக் கடலட்டை பிடிப்போரை அகற்றக்கோரி வழக்குத் தாக்குதல்!

Friday, July 6th, 2018

வடமராட்சி கிழக்குப் பகுதியில் சட்டவிரோதமாக அரச நிலத்தில் வாடி அமைத்து கடலட்டை தொழில் புரிபவர்களை அங்கிருந்து அகற்ற உத்தரவிடக்கோரி மருதங்கேணிப் பிரதேச செயலாளர் கிளிநொச்சி நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

வடமராட்சி கிழக்குப் பிரதேசத்தில் தங்கியிருந்து கடலட்டைத் தொழில் புரியும் பிறமாவட்ட மீனவர்கள் அரச நிலத்தில் அத்துமீறிக் குடியமர்ந்தே குறித்த தொழிலை மேற்கொள்கின்றனர்.

இவ்வாறு தொழில் புரியும் 8 நிறுவனங்கள் மீது கடந்த திங்கட்கிழமை வழக்குத் தாக்கல் செய்யப்பட்டன. இதன் அடிப்படையில் குறித்த நிறுவனங்களுக்கு எதிராக எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மேற்படி வழக்குகள் எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

இதேநேரம் யாழ்ப்பாண மாவட்ட எல்லைப் பகுதியில் வாடி அமைத்துள்ள 4 நிறுவனங்கள் தொடர்பில் இன்று பருத்தித்துறை நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது.

குறித்த பகுதியில் உள்ளுர் மீனவர்களைப் பாதிக்கும் வகையில் வெளிமாவட்ட மீனவர்கள் பலர் தங்கி நின்று சட்டத்துக்கு முரணாக தொழில் புரிவதனால் பல பாதிப்புக்கள் நிகழ்வதாக உள்ளுர் மீனவர்கள் நீண்டகாலமாக சுட்டிக்காட்டிவந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: