வடக்கு மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு ஆபத்து -இராணுவ தளபதி  மகேஸ் சேனாநாயக்க !

Monday, November 5th, 2018

இந்திய இலங்கை மீனவர்களின் பிரச்சினை காரணமாக இலங்கையில் வடக்கு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் வைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்,

இந்திய இலங்கை மீனவர் பிரச்சினை இன்று மனித பாதுகாப்பு என்ற விடயத்துக்கு அப்பால் வடக்கு மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய மீனவர்கள் தொடர்ந்தும் ரோலர்களை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்காரணமாக இலங்கை வடக்கு மீனவர்களின் மீன்பிடியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

உதாரணமாக 2000ஆம் ஆண்டில் 94 வீதமாக இருந்த மஞ்சள் டூனா மீன்பிடி, 2015ஆம் ஆண்டில் 90 வீதமாக குறைவடைந்துள்ளது என்றும் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts:

இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே - வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸை சந்திப்பு - இரு தரப்பு ஒப்பந்...
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான முழுமையான பொறுப்பை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே ஏற்க வேண்டும...
2024 ஆம் ஆண்டிற்குள் தேசிய சைபர் பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டுவருவதற்கு எதிர்பார்த்தள்ளதாக தொழில்ந...