வடக்கு – கிழக்கின் சலுகைகளை தற்போதைய அரசு பறித்துள்ளது – முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ!
Friday, October 26th, 2018
வடக்கு கிழக்கு மாகாணங்களில் 25 வருடங்களுக்குப் பின்னர் தேர்தல் நடைபெற்றிருந்தபோதும் அதன் சலுகைகளை தற்போதைய அரசாங்கள் பறித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தங்காலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்கள் மத்தியில் அவர் மேலும் தெரிவிக்கையில் வடக்கு கிழக்கில் 25 வருடங்களக்குப் பின்னர் தேர்தல்கள் நடைபெற்றிருந்த போதும் தற்போதைய அரசாங்கம் தேர்தல்களக்கு முகம் கொடுக்க அஞ்சுகிறது.
இணைந்து செய்படுவது பற்றி குறிப்பிடுகையில் எதிர்காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, மற்றும் ஒன்றிணைந்த எதிர்கட்சி ஆகியன எதிர்கால தேர்தல்களில் ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பாக எந்தவித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை.
தேர்தல் பற்றி தெரிவிக்கும் போது, தனிநபர் பிரேரணையை கொண்டுவருவதால் பயனில்லை. குறித்த பிரேரணை நிறைவேற்றப்பட்டாலும் அவர்களே தேர்தலை நடத்த வேண்டும். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பினை அரசாங்கள் செயற்படுத்தவில்லை என மேலும் தெரிவித்தார்.
Related posts:
|
|
|


