யாழ் மாவட்ட பனை – தென்னை வள கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் விசேட சந்திப்பு!

யாழ் மாவட்டத்தினை சேர்ந்த பனை – தென்னை வள கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் பிரதிநிதிகள் இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடினர்.
குறிப்பாக, நாட்டில் ஏற்பட்டுள்ள புதிய வரி விதிப்பு நடைமுறைகள் காரணமாக வடிசாலையின் உற்பத்திகளை மீண்டும் ஆரம்பிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மற்றும் பல்வேறு தொழில்சார் பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
குறித்த விடயங்ளை செவிமடுத்த அமைச்சர், மக்களுக்கு நன்மையை ஏற்படுத்தும் நியாயமான கோரிக்கைகளுக்கு தன்னுடைய முழுமையான ஒத்துழைப்பு கிடைக்கும் என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. –
000
Related posts:
வடக்கு மக்களின் தலைவிதியுடன் விளையாடிய மாபெரும் தடை நீங்கியது - டக்ளஸ் தேவானந்தா எம்.பி.தெரிவிப்பு!
முல்லையில் போராட்டத்தில் ஈடுபட்ட கடற்றொழிலாளர்களுடன் அமைச்சர் டக்ளஸ் பிரஸ்தாபிப்பு!
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நடவடிக்கை - 2 வருடங்களின் பின் யாழ்.வேம்படி மகளிர் கல்லூரியில் உணவகம் ...
|
|