முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணிப்பு!
 Friday, May 18th, 2018
        
                    Friday, May 18th, 2018
            இதனிடையே முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு சென்றிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட குழுவினரை நிகழ்வில் பங்கெடுக்காத வகையில் ஏற்பாட்டாளர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்றையதினம் பொது மக்களின் திரட்சியுடன் உணர்வுப் பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நிகழ்வில் கலந்துகொள்ளும் பொருட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, மருத்துவர் சிவமோகன், மற்றும் யாழ்.மாநகர முதல்வர் ஆர்னோல்ட், உள்ளிட்ட கூட்டமைப்பின் உறுப்பினர்கள் ஒருவரையும் நிகழ்வில் பங்கெடுப்பதற்கு ஏற்பாட்டாளர்கள் அனுமதி மறுத்திருந்தனர்.
நிகழ்வின் ஏற்பாட்டாளர்களின் எதிர்ப்பினை அடுத்து கூட்டமைப்பினர் வெட்கத்தால் தலை குனிந்தபடி ஏமாற்றத்துடன் நிகழ்விலிருந்து பின்வாங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        