மாறுகிறதா இலங்கை தொடர்பிலான இந்திய வெளியுறவுக் கொள்கை!

Friday, May 19th, 2017

இலங்கை தொடர்பிலான தனது கவனத்தையும்  கொள்கையையும்  மீள் வடிவமைக்கும் நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டுள்ளதாகத் தெரியவருகிறது. இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியின் கடந்த வார இலங்கை விஜயத்தின்போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரை அவர் தனது விஜயத்தின் இறுதிப்பகுதியில் அதுவும் புறப்படும் போது விமான நிலையத்தில் வைத்து சந்தித்தது இதனையே எடுத்துக் காட்டுவதாக ஆய்வாளர்கள் தேரிவித்துளனர்  அவர்களைச் சந்திப்பதற்கான அனுமதி இறுதி நேரத்திலேயே வழங்கப்பட்டிருந்ததுடன்,சந்திப்பு வெறும் 22 நிமிடங்கள் மட்டுமே நீடித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த விஜயத்தின் போது மோடி அவர்கள் மத்திய மலைநாட்டின் இந்திய வம்சாவளி தமிழர்களுடனும் அவர்களின் தலைவர்களுடனும் கூடுதலான நேரத்தைச் செலவிட்டமையும் இந்திய வெளியுறவுக் கொள்கையில்  ஏற்ப்படுள்ள மாற்றத்தை தெளிவாக உணர்த்துகிறது. இந்திய வம்சாவளி தமிழர்;களுக்கான மருத்துவமனை ஒன்றினையும் திறந்துவைத்து பெருந்திரளான மக்கள் கூடியிருந்த கூட்டத்தில் உரையாற்றியதுடன் அவர்களின் தலைவர்கள் இரு சாராருடனும்  தனித் தனியான  பேச்சுவார்த்தைகளையும்  நடத்தினார்.

மோடியின் வருகை குறிப்பிடத்தக்க வகையில் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளிலிருந்து மாறி இந்திய வம்சாவளி தமிழர்களின்பால் திரும்பியுள்ளதையே இவை  காட்டுகிறது. பிரித்தானியரால் நிர்வகிக்கப்பட்ட தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்களில் பணிபுரிவதற்காக 1823க்;கும் 1939க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் பிரிட்டிஷாரினால் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு  அழைத்துவரப்பட்ட மக்களின் வம்சாவளியினர்  இன்றும் பல இன்னல்களுடன் வாழுவது குறிப்பிடத் தக்கது.

Related posts: