மாணவர்களுக்கு சுரக்ஷா காப்புறுதி தொகையாக 70 லட்சம் ரூபா – கல்வியமைச்சு!

இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் சுரக்ஷா காப்புறுதித் திட்டத்தின் கீழ் காப்புறுதி தொகையாக இதுவரை 70 லட்சம் ரூபாவை மாணவர்களுக்குவழங்கியிருப்பதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தக் காப்புறுதிக் கொடுப்பனவிற்காக கடந்த மூன்று மாதகாலப் பகுதிக்குள் 2243 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாடளாவிய ரீதியில் கடந்த மாதம் 7ஆம் திகதி பாடசாலை மட்டத்தில் ஆரம்பித்த விளக்கமளிப்பு நிகழ்ச்சித் திட்டம் காரணமாக இந்தக் காப்புறுதியின்பயனை பெற்றுக்கொள்வதற்கான எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கல்வியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
Related posts:
பாடசாலை மாணவர்களுக்கெதிரான வன்புணர்வு தொடர்பில் மாணவர்கள் முறைப்பாடு செய்ய முன்வர வேண்டும் - யாழ்.மா...
அத்தியாவசிய மருத்துகளை பெற்றுக்கொள்ள பல நாடுகளுடன் கலந்துரையாடல் - சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப சேவ...
சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்துவது தொடர்பில் நாளாந்தம் முறைப்பாடு – தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார ச...
|
|