பேச்சுவர்த்தை தோல்வி: தபால் ஊழியர்கள் மீண்டும்  காலவரையற்ற வேலைநிறுத்தம்!

Saturday, December 30th, 2017

தபால் ஊழியர்களின் பிரச்சினைகளை தீர்க்கும் நோக்கில் தபால் திணைக்களத்தின் அனைத்து தொழிற்சங்கங்களின் தலைவர்கள் மற்றும் தபால் மற்றும் முஸ்லிம் மத விவகாரங்கள்அமைச்சின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தீர்வுகள் எதுவுமின்றி நிறைவடைந்ததால் திட்டமிட்டபடி வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக ஒன்றிணைந்த தபால்தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.

அதன்படி வேலை நிறுத்தத்தினை கைவிட வேண்டுமாயின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் அல்லது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நேருக்கு நேர் பேச்சுவார்த்தைஒன்று நடத்த எதிர்வரும் 48 மணி நேரத்தினுள் தமக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என  குறித்த ஒன்றியம் தெரிவித்துள்ளது.

மேலும் வேலை நிறுத்தத்தினை தொடர்ந்தும் முன்னெடுத்தால் தபால் சேவை மற்றும் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்கு அட்டைகள்வழங்கும் நடவடிக்கைகள் முடங்கும் என குறித்த ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts: