புதிய வரிமுறையை நீக்காவிட்டால் போராட்டம் வெடிக்கும் என எச்சரிக்கை!

Wednesday, July 5th, 2017

சகல தரப்பினரையும் பாதிக்கக்கூடிய புதிய வரிமுறைச் சட்டத்தை நீக்காவிட்டால் அடுத்தவாரம் பாரிய பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் தாங்கள் ஈடுபடப்போவதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் தொழிற்சங்க சம்மேளனம் அரசை  எச்சரித்துள்ளது.

2017 ஆம் ஆண்டு வரவு – செலவுத்திட்டத்தில் பிரேரிக்கப்பட்ட வரிவிதிப்பு தொடர்பான திருத்தங்களை நிதியமைச்சு இதுவரை செய்யாததால் அரசுக்கு சுமார் 7 ஆயிரம் கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் சிறிய மற்றும் நடுத்தர வியாபாரங்களில் ஈடுபட்டிருப்பவர்கள், புத்தகவெளியீட்டாளர்கள், கலைஞர்கள் உட்பட பல்வேறு தரப்பினருக்கும் கிடைக்கவேண்டிய பயன்கள் விரயமாகிப்போயுள்ளன.

புதிதாக வரவுள்ள சட்டத்தின் கீழ் இவர்கள் அனைவரும் தொடர்ந்து பாதிக்கப்படுவார்கள்.  நாட்டு மக்களுக்கும் நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கும் பெரும் அச்சுறுத்தலாகவுள்ள புதிய வரி விதிப்பு சட்டமூலத்தை உடனடியாக வாபஸ் பெறாவிட்டால் தங்களது சம்மேளனம் அடுத்தவாரம் நாடளாவிய ரீதியில் பாரிய பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் என்று அவர்  தெரிவித்துள்ளார்.

Related posts: