பிரபல பாடசாலை மாணவன் சடலமாக மீட்பு!

யாழ். சென்ஜோன்ஸ் கல்லூரியில் உயர்தரத்தில் கற்கும் மாணவன் ஒருவர் தாவடி தெற்கு கொக்குவில் பகுதியில் உள்ள அவரது வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
19 வயதான சண்முகரத்தினம் டார்வின் என்ற இந்த மாணவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர். சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
சடலத்தை மீட்ட பொலிஸார் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். சட்ட வைத்திய அதிகாரியால் நேற்று வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
மாணவன் மரணம் தொடர்பில் எந்த தகவலும் சரியாக கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக புலன் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன
Related posts:
இலங்கைக்கு வருகிறது மற்றுமொரு ஆபத்து!
வெட்டியி குழியில் எலும்பு எச்சங்கள் - அதிர்ச்சியில் அச்சுவேலி!
முடிவடைகிறது ஒப்பந்தம் : ரஷ்ய அதிபரின் அதிரடி அறிவிப்பு !
|
|