நாணயத்தாள் விவகாரம்: கால அவகாசம் நீடிப்பு – மத்தியவங்கி!
 Tuesday, January 2nd, 2018
        
                    Tuesday, January 2nd, 2018
            சிதைவடைந்த மற்றும் திரிபுபடுத்தப்பட்ட நாணயத் தாள்களை மாற்றிக் கொள்வதற்காக வழங்கப்பட்டிருந்த கால எல்லையை நீடிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மத்திய வங்கிக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
இதற்கமைவாக இந்தக் கால எல்லை எதிர்வரும் மார்ச் 31ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
தூய நாணயத் தாள் பாவனை தொடர்பான கொள்கைத் திட்டத்தின் கீழ் இன்றைய தினத்தின் பின்னர் திரிபுபடுத்தப்பட்ட நாணயத் தாள்கள் மூலம் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ள முடியாது என இலங்கை மத்திய வங்கி ஏற்கனவே தீர்மானித்திருந்தது.
நாணயத் தாள்களை அச்சிடுவதற்கு அரசாங்கம் வருடாந்தம் பாரிய தொகையை செலவிடுகின்றது.
செல்லுபடியாகும் நாணயத் தாள்களை தாம் திரிபுபடுத்தும் நபர்களுக்கு எதிராக 1949ம் ஆண்டின் 58ம் இலக்க பண சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும்  ஒரே தமிழ் அரசியல் தலைவர் டக்ளஸ் தேவானந்தா - கிழக்கு மக்கள் பெருமிதம்! ...
பிசிஆர் பரிசோதனைக்கு மறுத்த யாழ் நகர வர்த்த நிலையம் ஒன்று தனிமைப்படுத்தப்பட்டது!
மின் கட்டணம் செலுத்துவதற்கு வழங்கப்பட்ட சலுகை நீடிப்பு - சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க!
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        