தீவிர அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என்கிறார் கோட்டபாய

Monday, May 15th, 2017

தான் அரசியலில் நுழைவதற்கு இனமும் முடிவு செய்யாததால் தனது அமெரிக்க குடியுரிமையை  ரத்துச் செய்யப் போவதில்லை என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் – கோட்டபாய ராஜபக்ஷ  தெரிவித்துள்ளார். கொழும்பு பத்திரிகை ஒன்றிற்கு இவ்வாறு தெரவித்த அவர் 2020 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும்  நோக்கத்துடன் தனது அமெரிக்க குடியுரிமையை விட்டுக்கொடுக்க தான் முடிவு செய்ததாக வெளியாகிய செய்திகளையும் மறுத்தார்.

அவரின் அரசியல் பிரவேசத்திற்கு ஆதரவாக பல வணிகர்கள் செயல் படுவதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தன.இவற்றை மறுத்த அவர் எனது  குடும்ப உறுப்பினர்கள் பலர்  அமெரிக்காவில் வசிக்கிறார்கள், இதனால் நான் அடிக்கடி அமெரிக்காவிற்கு பயணம் செய்யவேண்டிய தேவை உள்ளது,  அத்துடன் நான் எனது குடியுரிமையை ரத்துச் செய்தால் அங்கிருந்து பெறும் எனது ஓய்வூதியத்தையும் இழக்க வேண்டி வரும் ,மேலும் தீவிர அரசியலில் ஈடிபடும் எந்த முடிவையும் இதுவரை நான்  எடுக்கவில்லை. எனவே, எனது அமெரிக்க குடியுரிமைகளை விட்டுக்கொடுக்க எனக்கு விருப்பமில்லை, என்று தெரவித்தார் கோட்டபாய ராஜபக்ஷ

சில பத்திரிகைகள் தேர்விதிருபது போல அமெரிக்க குடியுரிமையை ரத்துச் செய்வது என்பது  சிக்கலான செயல்முறை அல்ல, அமெரிக்க தூதரகத்தில்  ஒரு முறையான வேண்டுகோளை தாக்கல் செய்தால் 2 வாரங்கலில் அது ரத்தாகி விடும் எனவும்  அவர் கூறினார்.

Related posts: