தலைமையில் மாற்றம் ஏற்பட வேண்டும் – திஸ்ஸ அத்தநாயக்க!

Sunday, February 18th, 2018

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை மாறினால் தாம் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து செயற்படுவதாக அந்த கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

மாவனெல்லையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளதாக வெளியான செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது –

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் மாற்றம் ஏற்பட வேண்டும். சஜித் பிரேமதாச அல்லது கரு ஜெயசூரிய போன்றவர்களை கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்கவைத்து அந்த பொறுப்புக்கள் அவர்களிடம் வழங்கப்படும்பட்சத்தில், ஐக்கிய தேசிய கட்சி மீண்டும் வெற்றிப் பாதையில் செல்வதற்கான சந்தர்ப்பம் உருவாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்

Related posts: