தகவலறியும் உரிமைச் சட்டம் தொடர்பில் பன்னாட்டு மாநாடு!

Thursday, May 10th, 2018

அரசுக்கும் மக்களுக்குமிடையில் சிறந்த உறவை பேணுவதற்கும் அரச மற்றும் அரச நிறுவனங்களின் பொறுப்புக்கூறல் தன்மையை உறுதிப்படுத்துவதற்குமான தகவலறியும் உரிமைச்சட்டம் தொடர்பான பன்னாட்டு மாநாடு நேற்று கொழும்பில் உள்ள கொள்கை ஆய்வு நிலையத்தில் இடம்பெற்றது.

இலங்கையில் தகவலறியும் உரிமைச் சட்ட மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டு ஒரு வருட கால நிறைவை முன்னிட்டு இந்த மாநாட்டை இலங்கை பத்திரிகை நிறுவனம் மற்றும் நோர்வே தூதரகம் இணைந்து ஏற்பாடு செய்தன.

நோர்வே, இந்தியா, மெக்சிகோ, பங்களாதே~;, மியன்மார், பாகிஸ்தான் மற்றும் இலங்கை உட்பட ஏழு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர்.

இரண்டு நாள்கள் ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாட்டில் இலங்கை உள்ளிட்ட ஏனைய நாடுகளிலும் தகவலறியும் உரிமைச் சட்டம் தொடர்பான நடைமுறைத் தன்மை குறித்தும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் நாட்டு மக்களுக்கு காணப்படும் உரிமைகளின் நிலையான தன்மை குறித்து கலந்துரையாடப்படவுள்ளது.

தகவல் தேடுவோரின் பாதுகாப்பு ஆபத்து, தனிப்பட்ட தரவுகளைப் பாதுகாத்தல், ஊடகம் சிவில் சமூக அமைப்புக்களின் வகிபாகம், எதிர்காலத்தில் தகவலறியும் உரிமைச் சட்டம் மற்றும் தகவல் வெளிப்படுத்தல் நுணுக்கங்கள் எனும் தலைப்புக்களில் விரிவுரைகள் வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: