ஜனநாயகத்தைப் பாதுகாப்பதில் அரசாங்கம் மௌனம் சாதிக்க கூடாது – வெளிவிவகார அமைச்சர்

Monday, June 26th, 2017

இனவாதிகள் ஜனநாயகத்தை கேள்விக்குள்ளாக்கும் வகையில் செயற்படுவதை அரசாங்கம் பார்த்துக் கொண்டு மௌனம் சாதிக்க முடியாது என வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

முன்னாள் நிதி அமைச்சர் ரொனி டி மெல்லை அவரது இல்லத்தில் சந்தித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்.“சட்டத்திற்கு முரணான செயற்பாடுகளில் ஈடுபடும் எந்தவொரு நபராயினும் குழுவாயினும் கைது செய்து அவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்

அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கி நாட்டுக்குள் அராஜக நிலைமையை உருவாக்கச் செயற்படும் குழுக்களை சட்டத்தின் முன் கொண்டுவர பொலிஸார் இதனை விட வேகமாக செயற்பட வேண்டும்” என அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts: