சேதமடைந்த வீடுகளைத் திருத்துவதற்கு தலா 5 லட்சம் யாழ்ப்பாண மாவட்டத்தில் 230 வீடுகளுக்கு தேசிய வீடமைப்பு அதிகார சபை வழங்கும்

Thursday, February 22nd, 2018

யாழ்ப்பாண மாவட்டத்தில் வீடுகள் சேதமடைந்தவர்களுக்கு அவற்றைத் திருத்துவதற்காக தேசிய வீடமைப்பு அதிகார சபை நிதி வழங்கவுள்ளது. இந்த வருடம் 230 வீடுகளைச் சீரமைக்க அதிகார சபை தீர்மானித்துள்ளது.

சீரமைக்கப்படும் ஒவ்வொரு வீடுகளுக்கும் 5 லட்சம் ரூபா வழங்கப்படவுள்ளது என்று சபையின் திட்டமிடல் பிரிவினர் தெரிவித்தனர்.

இது தொடர்பில் அவர்களது அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது:

யாழ்ப்பாண மாவட்டத்தில் நடப்பு ஆண்டுக்கான தேசிய வீடமைப்பு அதிகார சபையின் வேலைத் திட்டத்தில் 230 வீடுகளை முழுமையாகச் சீரமைப்பதற்கென நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கிராம மட்டத்தில் இந்த வேலைத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. வீடு முழுமையாக அல்லது பகுதியாக பாதிப்புக்குள்ளான நிலையில் காணப்படும் பட்சத்தில் அந்த வீடுகள் முழுமையாகச் சீரமைக்க இந்த நிதி வழங்கப்படவுள்ளது.

இந்த வருடம் சிறுப்பிட்டியில் 30 வீடுகளும், தம்பாட்டியில் 10 வீடுகளும், பூம்புகாரில் 12 வீடுகளும், போயிட்டியில் 20 வீடுகளும், கிந்து சிட்டியில் 36 வீடுகளும், பொக்கணையில் 11 வீடுகளும், யோகபுரத்தில் 26 வீடுகளும், ராஜகிராமத்தில் 85 வீடுகளுமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 230 வீடுகள் சீரமைக்கப்படவுள்ளன. அவற்றுக்கான பயனாளிகள் தெரிவு பிரதேச செயலகங்களின் ஊடாக இடம்பெற்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: