சுமந்திரன் மாகாண சபைக்கே பொருத்தமானவர் – சுரேஷ் பிரேமச்சந்திரன்!

Monday, July 3rd, 2017

எம்.ஏ.சுமந்திரன் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்து விட்டு, மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவது பொருத்தமாக இருக்கும் என, ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சுமத்திரன் பாராளுமன்ற உறுப்பினராக செயற்படுவதை விட, மாகாண சபைகளிலேயே அதிக தலையீடு செய்வதாக, அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், வட மாகாணத்தில் முதலமைச்சர், அவைத் தலைவர் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் என, அனைவரது செயற்பாடுகளிலும், சுமந்திரன் அழுத்தங்களை கொடுப்பதாக அவர் கூறியுள்ளார்.  தனக்கு விக்னேஸ்வரனுடன் நிலவும் கருத்து வேறுபாடு காரணமாக, அவருக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தி, முதலமைச்சர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்துவதே பாராளுமன்ற உறுப்பினரின் தேவையாக இருக்கலாம் எனவும் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.  இதேவேளை, விக்னேஸ்வரனுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையின் பின்னணியில், சுமந்திரன் உள்ளிட்ட குழுவினர் இருப்பது அனைவரும் அறிந்த உண்மை எனவும், ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:

யாழ்ப்பாணத்தில் 30 வயதுக்கு மேற்பட்ட 75 வீதமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது - வடக்கு மாகாண ச...
கோப், கோபா மற்றும் ஏனைய குழுக்களின் அதிகாரங்களை அதிகரிப்பது தொடர்பான சபைத் தலைவரின் பிரேரணைக்கு கட்ச...
பாலஸ்தீன பிரச்சினைக்கு தீர்வு காணும் கொள்கைத் திட்டத்தை சாத்தியமாக்குவதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் ச...