சீரற்ற காலநிலையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!
Monday, May 28th, 2018
நாட்டில் நிலவிய அசாதாரண காலநிலை காரணமாக இதுவரையில் 23 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
குறித்த அனர்த்தங்களின் போது 13 பேர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 20 மாவட்டங்களில் உள்ள பொதுமக்களே இவ்வாறு அனர்த்தங்களுக்கு முகம்கொடுத்துள்ளனர். 43604 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
Related posts:
சாவகச்சேரி வைத்தியசாலை மதிலை உயர்த்த வேண்டும்!
கேரளா விமான விபத்து: உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 18 அதிகரிப்பு!
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மற்றும் இணையவழி பாதுகாப்பு சட்டமூலங்கள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 03 ஆ...
|
|
|


