சிரேஷ்ட பிரதி காவற்துறைமா அதிபர் லலித் ஜயசிங்கவின் பணி நிறுத்தம் தொடர்பில் வியாழக்கிழமை இறுதி தீர்மானம்!

Monday, July 17th, 2017

கைது செய்யப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதி காவற்துறைமா அதிபர் லலித் ஜயசிங்கவின் பணி நிறுத்தம் தொடர்பில் இறுதி தீர்மானம் எதிர்வரும் வியாழக்கிழமை அறிவிக்கப்படும் என தேசிய காவற்துறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த காவற்துறை அதிகாரி தொடர்பில் நீதிமன்ற அறிக்கை கிடைத்த பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்படும் என காவற்துறை ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாஸ குரே தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணம் – புங்குடுதீவு மாணவி வித்யா படுகொலை சம்பவம் தொடர்பான பிரதான சந்தேக நபரான சுவிஸ் குமாருக்கு பாதுகாப்பு வழங்கி, தப்பிச் செல்ல ஆதரவு வழங்கிய குற்றச்சாட்டு தொடர்பிலேயே சிரேஷ்ட பிரதி காவற்துறைமா அதிபர் லலித் ஜயசிங்க கைது செய்யப்பட்டார்.இந்நிலையில் அவர் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Related posts:

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான மீண்டும் கட்டுப்பாட்டு விலை - நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்ச...
வினைத்திறனை அதிகரிப்பதற்கான செயற்பாடுகளை விரிவுபடுத்துமாறு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா துறைசார்...
பல்கலைக்கழகப் பேரவை ஒப்புதல் - யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மூவர் பேராசிரி...