சிரேஷ்ட பிரதி காவற்துறைமா அதிபர் லலித் ஜயசிங்கவின் பணி நிறுத்தம் தொடர்பில் வியாழக்கிழமை இறுதி தீர்மானம்!

Monday, July 17th, 2017

கைது செய்யப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதி காவற்துறைமா அதிபர் லலித் ஜயசிங்கவின் பணி நிறுத்தம் தொடர்பில் இறுதி தீர்மானம் எதிர்வரும் வியாழக்கிழமை அறிவிக்கப்படும் என தேசிய காவற்துறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த காவற்துறை அதிகாரி தொடர்பில் நீதிமன்ற அறிக்கை கிடைத்த பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்படும் என காவற்துறை ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாஸ குரே தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணம் – புங்குடுதீவு மாணவி வித்யா படுகொலை சம்பவம் தொடர்பான பிரதான சந்தேக நபரான சுவிஸ் குமாருக்கு பாதுகாப்பு வழங்கி, தப்பிச் செல்ல ஆதரவு வழங்கிய குற்றச்சாட்டு தொடர்பிலேயே சிரேஷ்ட பிரதி காவற்துறைமா அதிபர் லலித் ஜயசிங்க கைது செய்யப்பட்டார்.இந்நிலையில் அவர் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Related posts:

ஐ.ம.சு.கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தொடர்ந்தும் ஐ.சு.கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றனர் -நாடாளுமன்ற உ...
கல்வி பொது தராதர பத்திர சாதாரண தரப்பரீட்சையை எதிர்வரும் மார்ச் மாதத்தில் நடத்துவதற்கு நடவடிக்கை – அம...
அத்தியாவசியப்பொருட்களின் விலைகளை சந்தை நிலைமைகளே தீர்மானிக்கின்றன – ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் வில...

யாழ். மாவட்டத்தை தொடர்ந்தும் அச்சுறுத்தும் கொரோனா – இதுவரை 115 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!
மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணம் தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கவில்லை - அமைச்சர் ரம...
போராட்டங்கள் என்ற போர்வையில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக அதியுச்ச அதிகாரம் பயன்பட...