சமுர்த்தி மீது மக்கள் நம்பிக்கை இழந்ததுள்ளனர்  – அமைச்சர் மங்கள!

Friday, June 1st, 2018

தெற்காசியாவின் வறுமை மட்டம் குறைந்த நாடு என்ன நிலையை அடைந்துள் நாடு இலங்கையாகும் என்று அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

2012ஆம் ஆண்டில் ஆறு தசம் 7 சதவீதமாகக் காணப்பட்ட வறுமை மட்டம் தற்சமயம் நான்கு தசம் 4 சதவீதம் வரை குறைவடைந்திருக்கின்றது.

நிலைபேறானா அபிவிருத்தி இலக்கின் கீழ் 2030ஆம் ஆண்டளவில் நாட்டில் இருந்து வறுமையை முற்றாக ஒழிப்பது அரசாங்கத்தின் இலக்காகும் என்று அவர் கூறினார்.கொழும்பில் இடம்பெற்ற செயலமர்வு ஒன்றில் அமைச்சர் மங்கள சமரவீர உரையாற்றினார். தொடர்ந்தும் பேசிய அவர்,

சமுர்த்தி வேலைத்திட்டத்தினால் எதிர்பார்க்கப்பட்ட இலக்கை அடைந்து கொள்ள முடியவில்லை. வறுமை அரசியல் வாதிகளின் ஆயுதமாக மாறியிருக்கின்றமை இதற்கான காரணமாகும்.

சமுர்த்தி அலுவலகம் அரசியல் வாதிகளின் அலுவலமாக மாறியிருக்கின்றது. சமுர்த்தி மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை சீர்குலைவதற்கும் இது காரணமாக அமைந்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

Related posts: