சட்டவிரோத நிர்மாணங்கள் புதிய சட்டமூலம் அறிமுகமாகிறது!

Tuesday, May 29th, 2018

2009 க்கு முன்னர் அரச நிறுவனங்களினால் நிர்மாணிக்கப்பட்ட தொடர்மாடி குடியிருப்புக்கான சட்டரீதியான அங்கீகாரத்தை அரசாங்கம் வழங்கவுள்ளது.

கட்டுமானங்களின் கீழ் பகுதிகள் ஒழுங்குவிதிகளை மீறி உரிமையாளர்களால் விரிவுபடுத்தி கட்டப்படாமல் இருந்தால் கூட அந்தத் தொடர்மாடி குடியிருப்புகளுக்கு சட்ட ரீதியான அங்கீகாரம் வழங்கப்படவிருக்கிறது.

யோசனைக்கு சட்டரீதியான பெறுமதியை கொடுப்பதற்காக அரசாங்கம் குடியிருப்பு உரிமை சட்டமூலம் (விசேட ஏற்பாடுகள்) ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளது.

தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்ட தொடர்மாடி குடியிருப்புகளுக்கான உறுதிகளைப் பெற்றுக்கொள்வதற்கு தற்போது உள்ள தடைகளையும் அரசாங்கம் அகற்றவுள்ளது.

உத்தேச சட்டமூலத்தின் பிரகாரம் சொத்துகள் கட்டிட வரைபடம் இல்லாத நிலையில் கூட உள்ளுராட்சி சபை பதிவு செய்யப்படுவதற்கு அங்கீகாரம் வழங்கப்படவுள்ளது.

உள்ளுர் அதிகார சபையினால் நியமிக்கப்பட்ட உறுதி சான்றிதழ் கிடைக்காத பட்சத்தில் அதாவது மதிப்பீட்டு இலக்கம் ஒவ்வொரு தொடர்மாடி குடியிருப்புக்குமான அடையாளங்கள் இல்லாத நிலையில், அந்த மாதிரியான தொடர்மாடி குடியிருப்புகள் உள்ளுர் அதிகார சபையின் அங்கீகாரத்தை பெற்றிருக்காத திட்டத்தை கொண்டிருப்பதற்கும் அல்லது சான்றிதழ் ஒன்று தொடர்மாடி குடியிருப்பு முகாமைத்துவ அதிகார சபையின் பொது முகாமையாளரால் வழங்கப்பட்டிருக்காத போதிலும் அந்த திட்டத்திற்கு அங்கீகாரம் வழங்கப்படவுள்ளது. எவ்வாறாயினும் ஒழுங்கு விதிகள் மூலம் எந்தளவுக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக இருக்கும் என இன்னமும் தெரியவில்லை.

Related posts: