கோழிமுட்டை விற்பனையிலும் மாபியா – நுகர்வோர் உரிமைக்கான பாதுகாப்பு தேசிய இயக்கம்!

Friday, June 29th, 2018

உற்பத்தி விலையை விட அதிக விலையிலேயே சந்தையில் முட்டை விற்கப்படுகின்றது. முட்டை விற்பனையில் வியாபாரிகள் ஊழல் செய்வதாக நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார்.

நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்;கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

சந்தைகளில் தற்போது முட்டை விலை அதிகரித்துள்ளது. சாதாரணமாக முட்டை உற்பத்தி நிலையங்களில் இருந்து கொள்வனவு செய்யப்படும்போது 14.20 ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்படுகின்றது. விற்பனை நிலையங்களுக்கு முட்டைகள் கொள்வனவு செய்யப்படும்போது 15.50 ரூபா என்ற அடிப்படையில் கொள்வனவு செய்யப்படுகின்றது.

இறுதியாக நுகர்வோர் முட்டையைக் கொள்வனவு செய்யும்போது 17 ரூபா அல்லது 18 ரூபாவுக்கு கொள்வனவு செய்கிறார்கள். முட்டையொன்றின் உற்பத்தி விலை 8.50 ரூபாவுக்கும் குறைவானதாகும்.

கோழி இறைச்சியின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதனால் முட்டை உற்பத்தியின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. வியாபாரிகள் தீர்மானிக்கப்பட்ட விலையில் முட்டையை விற்பனை செய்வதால் முட்டை விலை அதிகரித்துள்ளது. நுகர்வோர் அசௌகரியத்தை எதிர்நோக்கி வருகின்றனர். குறைந்த விலையில் பெற்றுக்கொள்ளப்படும் நிறையுனவான முட்டை விற்பனையில் ஊழல் இடம்பெறுகின்றது. நுகர்வோருக்கு சாதாரண விலையில் முட்டைகளை பெற்றுக்கொடுக்க அரசு தீர்மானம் எடுக்க வேண்டும் என்றார்.

Related posts: