கிளிநொச்சி கமநலத் திணைக்களத்துக்கு 48 வேலைத்திட்டங்களுக்கு ரூ.146 மில்லியன் ஒதுக்கீடு!

Tuesday, July 31st, 2018

கிளிநொச்சி மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்களத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இந்த வருடம் 48 வேலைத்திட்டங்களுக்கென 146 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்ட கமநல சேவை நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு வேலைத்திட்டங்கள் இடம்பெறுகின்றன. அந்த வகையில் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்துக்கான செயலகம் 17 வேலைத்திட்டத்துக்கு 50 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளது.

கமநல அபிவிருத்தித் திணைக்களம் 14 வேலைத்திட்டங்களுக்கு 45 மில்லியன் ரூபா நிதியையும் மீள்குடியேற்ற மறுவாழ்வளிப்பு வடக்கு அபிவிருத்தி அமைச்சு 4 வேலைத்திட்டங்களுக்கு 10 மில்லியன் ரூபா நிதியும் விவசாய அமைச்சு 4 வேலைத்திட்டங்களுக்கு 26 மில்லியன் ரூபா நிதியும் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சு ஒரு திட்டத்துக்கு 15 மில்லியன் ரூபா நிதியும் உலக உணவுத் திட்டம் 8 வேலைத்திட்டங்களுக்கு 25 ஆயிரம் மனித நாள்களும் என வேலைத்திட்டங்களுக்கு 146 மில்லியன் ரூபா நிதியும் ஒதுக்கியுள்ளன என்று திணைக்களத்தினர் தெரிவித்தனர்.

Related posts: