காணிகள் படிப்படியாக விடுவிக்க நடவடிக்கை : இராணுவ பேச்சாளர் சுமித் அத்தப்பத்து!
Tuesday, June 5th, 2018
தமது பாவனையில் இல்லாத காணிகளை விடுவிப்பதற்கு இராணுவத்தினர் மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமைய சில காணிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டுவருவதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு கருதி மக்களிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட காணிகளில் இராணுவம் பயன்படுத்தாத அல்லது சிறிய அளவில் பயன்படுத்தப்படும் காணிகளைவிடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
இதற்கமைய குறித்த காணிகளில் உள்ள இராணுவத்திற்கு சொந்தமாக உடமைகள் அகற்றப்பட்டு வருவதாகவும், காணிகளை படிப்படியாக விடுவிக்க நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இராணுவ பேச்சாளர் குறிப்பிட்டார்.
அத்துடன் வலி வடக்கில் உள்ள சுமார் 30 ஏக்கருக்கும் அதிகமான காணிகள் உரிமையாளர்களுக்கு மீளப் பெற்றுக்கொடுப்பதற்காக இராணுவத்தால் நடவடிக்கைகள்முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
குறிப்பாக காங்கேசன்துறை வீதியின் இருமருங்கிலும் உள்ள காணிகளை விடுவிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது
Related posts:
|
|
|


